என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

30 October 2009

நிச்சயதார்த்தம்


புதிதாய் வார்க்கப்பட்ட கவிதை
ஒன்று
என் தொகுப்பில் சேர்க்கப்பட்டது
இன்று
எனது நிச்சயதார்த்தம்!!!!

27 October 2009

பாத்திர பிச்சை


முதுகில் குழந்தை சுமந்தபடி

பிச்சை எடுக்கும் ஆப்பிரிக்க பெண்மணியிடம்,

அந்நாட்டு தாள் நாணயம் கைவசம் இல்லை

என்பதை ஆங்கிலம் தெரியாத அவளிடம்

எப்படி சொல்லுவேன்

நினைத்திருப்பாள் இவன் ................. என்று.

12 October 2009

நிகழ்காலம்






உன்னை முதல் முதலாய் பார்த்த போது
நீ சிந்திய வெட்கத்தின் ஓசை
இன்னும் என் காதுகளில்...

உன்னிடம் முதல் முதலாய்
பேசிய என் வார்த்தைகளின் வாசம்
இன்னும் என் நாசியில்...

30 August 2009

தர்க்கம்(லாஜிக்)


பெரும்பாண்மையோருக்கு,

காதலில் தோற்ற பின்பும்
கனவில் வருகிறாள்
பழைய காதலி
சிறிது வெறுப்போடு

திருமணத்தில் வென்ற பின்பும்
கனவில் வருவதில்லை
புதிய மனைவி
சிறிது சிரிப்போடு

புரியவில்லை தர்க்க சாஸ்திரம் !

28 August 2009

முன்அறிவிப்பு


நீ எப்போது
என் அறைக்கு வருவதாயினும்
முன்பே அறிவித்துவிடு....
சமயத்தில் கனவிற்கும் நிஜத்திற்கும்
வித்தியாசம் கண்டுகொள்ள
முடிவதில்லை
என் விழிகளுக்கு !

21 August 2009

பறக்கும் முத்தம்




நீ எனக்கு தருவதாய் இருக்கும்
முத்தத்தை இனிமேல் பறக்க விடாதே !
நீ அனுப்பும்
ஒவ்வொரு முறையும்
காற்று
பாதியை எடுத்துக்கொண்டு
மீதியை தான் கொடுகின்றது
என்னிடம்..... !

03 June 2009

மதுவும் மதுவும்


அன்பே,
உன்னை பார்த்த கணமே
என் பரவசம்
நூறு சதவிகிதத்தை அடைகிறது

உன்னை
தொடும்போதே வயது குறைந்து
குழந்தை ஆகிவிடுகிறேன்

உன்னை
என் கைகளில் ஏந்தி
கண்ணத்தில் முத்தமிடுகையில்
மெய்மறந்து போகிறது

உன்னை
தலை திருகி மார்பணைத்து
உச்சு முகர்கையில்
மின்சாரம் பாய்கிறது

உன்னை
குப்பிக்குள் இருந்து விடுவித்து
கோப்பைக்குள் தள்ளும்போது
பெருக்கெடுக்கிறது பேரானந்தம்

உன்னை எனக்குள்ளும்
என்னை உனக்குள்ளும் கலக்கும்
போது தான் பிறந்த பலனை
அடைவதாய் உணர்கிறேன்

நீ மாயையாம்
நீ மதிகெடுப்பாயாம்
நீ மயக்கிவிடுவாயம்
நீ விஷமாம்
நீ உயிர்கொல்லியாம்
நீ நரகமாம்

அவர்களுக்கு என்ன தெரியும்?
உன்னை விட
கொடியவள்
அவள் தானென்று....

09 April 2009

போர் + ஆட்டம்




தினமும்
உன் "இனிய இரவு" குறுஞ்செய்தி
வரும்போதெல்லாம் - விழிக்கின்றேன்
மீண்டும் தூங்க வழி தெரியாமல்!
உனது இந்த தாக்குதல்
அஹிம்சையா?
வன்முறையா?

14 March 2009

கானல் நதி

இன்று சனி இரவு, வாரத்தின் கடைசி நாள் மற்றும் கடந்த கால வாழ்கையை அசை போடும் நாள். எல்லா சனி இரவுகளும் நண்பர்களோடு கழியும். இன்று நான் மட்டும் விரும்பியோ விரும்பாமலோ தனிமையில். காரணம் பிடிகொடுக்க முடியாமல் நழுவுகிறது. நண்பர்களின் புகைமூட்டமோ பீர் வாசணையோ போதையின் உச்சரிப்போ இல்லாத சனிக்கிழமை. இரு கைகளும் தலையணையாய், நெற்றிக்கு நேராய் சுழன்று கொண்டிருக்கும் காத்தாடியும், சுவர் கடிகாரத்தின் நொடி முள் சப்தமும் துணை இருக்க நான் மட்டும் தனிமையில் போகின்றேன் எட்டாண்டுகளுக்கு முன்பு.

அன்று என் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். கன்னியர் வாசம் வீசினாலே பத்தடி விலகி போகும் ஆடவர் கூட்டத்தில் நான். என் பாதி வாழ்வை பள்ளியில் தொலைத்து விட்டு மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்த சமயம். மலை மேல் முட்டிய மேகமாய் அவள். முட்டிய வேகத்தில் கலைந்து போனாள். நான் நகராத பாறையாய் மெய் சிலிர்த்து நின்றேன். என் நாசியிலிருந்து மூச்சுக் காற்று எட்டிப்பார்க்க சில நிமிடங்கள் ஆகிப்போனது. அவள் அழகு என் கண்தேடும் அழகிற்கும் என் மனம் தேடும் அழகிற்கும் இடையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தினமும் ஓரிரு முறையாவது என் கண்ணிலும் கணவிலும் கடந்து போனாள். அவளோ இறை தேடும் கோழிக்குஞ்சாய் அவள் பாதையில் போய்க்கொண்டிருந்தாள். இடையில் தேர்வுக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று கொண்டிருந்தேன்.

முதலாம் ஆண்டு தேர்வு முடிந்து மாதங்கள் ஓடி விட்டது. இரண்டாவது வருடம் தொடங்கி என்துறையில் சில பொறுப்புகளை ஏர்கலானேன். அவளும் என் துறைசார்ந்ததால் தினமும் பார்க்கும் சந்தர்ப்பம். தினமும் வரும்போதும் போகும்போதும் அவள் கண்கள் மட்டும் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தது. அவளுக்கு மட்டுமன்று துறையில் அனைவருக்கும் தெரிந்த முகமாய் நானிருக்க, ஒரு செய்முறை இடைத்தேர்வு. நான் செய்து முடித்து, விடைத்தாள் நிரப்பிக்கொண்டிருந்தேன் எனது பின்புறம் இருந்து என் பேர் சொல்லி அழைக்கும் ஒரு பெண்க்குரல் அது "அவள்". அவள் உதவி கோரி கோரிக்கை வைத்தாள். செய்யமுடியாத சூழ்நிலை எனக்கு. (அதுவும் சுயநலத்தால் தான்).  நான் சற்றும் திரும்பி பார்க்காமல் விடைத்தாள் நிரப்புவதயே இந்த ஜென்மத்து கடமையாய் செய்து கொண்டு இருந்தேன். அவளது குரல் கூக்குரல் ஆனது. நான் சற்றும் திரும்பி பார்க்காமல் தெறித்து பொய் விடைத்தாள் வீசி விட்டு விடுதிக்கு ஓடினேன். இரண்டு நாள் இடைவெளி. மீண்டும் வேறொரு செய்முறை தேர்வு, அவளை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தேன், அவளும் என் கணைகளுக்கு எதிர்கணைகள் வீசினாள். இரண்டு நிமிட தொடர் பார்வையால் என்னுள் அணைந்து கிடந்த மின்சார விளக்கு எரியத்தொடங்கியது. அவளின் இரண்டு சென்டிமீட்டர் புன்னகையில் என்னை நெருக்கமாக்கிக் கொண்டாள். சிரிக்க மறந்திருந்த எனக்கு சிரிப்பை ஞாபகபடுத்தியவள் அவள் தான்.

20 January 2009

அம்மா--மழை!




ஒரு மழை தினத்தன்று
என்னை நீ!
பெற்ற போது;
தொட்ட போது;
தொட்டிலில் இட்டபோது;
ஆரம்பித்த கதகதப்பு
ஆண்டுகளுக்குப் பின் - உன்னை
இடுகாட்டில்
இட்டதோடு மறைகிறது
மீண்டும் ஒரு மழை தினத்தன்று!
------------------------------------------

அன்று ஒரு மழை இரவில்
நிலா இல்லாமலே ஊட்டி விட்ட
நிலாச்சோறு நினைவிருக்கிறது
இன்று
நீ நிலவிடம்
நான் சோற்றிடம்
இது முரண்பாடா?
இடைவெளியா?
-------------------------------

14 January 2009

பொங்கலோ பொங்கல்

காலையில் கண்விழித்தவுடன்
கருங்காப்பி குடித்து
வேப்பங்குச்சியில் பல்தேய்த்து - கசந்த வாயுடன்
வேகமாய் குளித்து
ஈரத்தலையுடன் புத்தாடை புனைந்து
ஈ மொய்க்கும் கரும்பை நுனிகலைந்து வைத்துவிட்டு
தொழுவத்தில் பசுவிற்கு வைக்கோல் இட்டு
தொழுவதற்கு வாசலுக்கு அழைத்துவந்து
கல்லால் செய்த அடுப்பை
கரிவிறகால் நிரப்பிவிட்டு
மஞ்சள் பூசிய
மற்பானை வைத்து
பச்சரிசி இட்டு
பாசமலர்கள் புடைசூழ
பொங்கிவரும் சமயம்
பொங்கலோ பொங்கல்!
என்று உரக்க கத்தும்போது................

என் செல்பேசி
என்னை எழுப்பியது
ச்சே அத்தணையும் கணவா?
ஆண்டவா என்று விடியும் இந்த பொங்கல்
மீண்டும் என் சொந்த ஊரில்?