என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

30 August 2010

இடம்

                 
                                                                                                      
பம்பரம் விட்டது
பச்சக்குதிரை தாண்டியது
கிட்டிப்புல் அடித்தது
கிணற்றில் மிதந்தது
கோலிகுண்டு ஆடியது
கோழிக்கு வலையிட்டது
ஆற்றில் மீன் பிடித்தது
ஆலவிழுதில் தொங்கியது
மாங்காய் பறித்தது
மணலில் புரண்டது

ஓடி பிடித்தது
ஓணானுக்கு சுருக்கு வைத்தது
ஊஞ்சல் கட்டியது
ஊமதங்காய் உடைத்தது
மிதிவண்டி பழகியது
மின்மினி பூச்சி பிடித்தது
கண்ணாமூச்சி விளையாடியது
காக்கா கடி கடித்தது
வரை
நினைவில் வந்துபோகிறது சகா! - உன்னை
தொலைவில் கண்ட
அந்த ஒரு கணத்தில்!

தோட்டத்தின் நடுவே
நான் வானம் பார்த்து
கதை நடுகிறேன்
நீ பூமி பார்த்து
கன்றுகள் நடுகிறாய்

குளத்தில் ஒன்றாக முங்கி
வெவ்வேறு இடத்தில் எழுவோமே
இதுவும் அப்படித்தானா?

No comments:

Post a Comment