என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

31 December 2008

வருடத்தின் கடைசி நாள்


இறந்து போன மாதங்கள்
கடந்து போன நாட்கள்
தவறிப் போன மணித்துளிகள்
சிதறிப் போன விநாடிகள்

இவை யாவற்றிற்கும் ஒரு நிமிட
மௌன அஞ்சலி செலுத்திவிட்டு

வரவேற்போம் புதிய வருடத்தை
கெட்டி மேளத்தோடு!

02 October 2008

மழைக் கவிதை-5


நேற்றிரவு
நீயும் நானும் குடையோடு
நடந்திருந்தாலும்
நனைந்திருந்தேன் அதிகாலையில்.
கணவில் மழை..!

22 September 2008

செல்வியான செல்வனுக்கு

நண்பா,
உன் நடை உடை பாவணைகளில்
உனக்குள் ஒரு பெண்ணை கொண்டிருந்தாய்
உருவமும் பெண்ணாகிபோனது கண்டு பெருமிதம் - பிறகு
எதற்காக இந்த சமுதாய பயம்?

எழுந்து நில்
கண்களை திறந்து வை
காதுகளை மூடிக்கொள்
கேள்விகளுக்கு பதிலாய் நீயே நில்
வேல்விகளை தொடங்கிவிடு
தோல்விகளுக்கு தோள் கொடு
தாழ்வான மனதை தகர்த்திடு
தயக்கமான செயலை தவிர்த்திடு
தரமான பாதையை தேர்ந்தெடு
சுகமான வாழ்வை சுமந்திடு.................
இங்ஙனம்
இப்போதும்
உன் நண்பனான நான்

12 June 2008

ஒழிப்ப்ப்ப்ப்பு!

குழந்தை தொழிலாளிகள்
ஒழிப்பு தினத்தையொட்டி
விழா கொண்டாடிய
கட்சி வளாகத்தில்
சட்டை இல்லாத சிறுவன்-இனிப்பு
தட்டை ஏந்தியவாறு.

11 June 2008

பெண்



இந்த உடல் விற்பனைக்கு அல்ல
-விலைப்பெண்

இந்த உடல் வாடகைக்கு அல்ல
-மணப்பெண்

இந்த உடல் வண்ணம் பூசிக்கொள்ள
-கைம்பெண்

22 May 2008

நீயும் நானுமா



தீகா என்பது அவள் பெயர். பி.பி.ஏ படித்துவிட்டு ஒரு டிராவல்ஸ் எஜென்சில் பனி புரிந்து வந்தாள். சுமாரான அழகு, ஓரளவான நிறம், நல்ல உடல் வாகு, அவளை பார்த்தாலே சற்று பேச வண்டும் போல் இருக்கும் கண்கள் என்று ஒரு நடுத்தர தமிழ் பெண்ணுக்குரிய அம்சங்களுடன் இருப்பாள். பேச்சு ஒன்றே இது வரை தன்னை வாழ வைக்கிறது என்று முற்றிலும் நம்புபவள். மாறன் அடிக்கடி அங்கு வந்து போய்கொண்டு கொண்டிருப்பான். அப்போது தான் தீகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கொஞ்சிப் பேசும் கண்கள், இதமாகப்பேசும் தோணி, என்ன உடம்பு சரில்லையா என்பது போன்ற அக்கறை பேச்சு, எங்க சாப்பாடு இன்னைக்கு போன்ற உபசரிப்புகளும் அவர்களின் இடைவெளியை நிரப்பி இருந்தன. செல்பேசி எண்கள் பரிமாறப்பட்டன. ஒரு நாள் அவன் வரவில்லை என்றாலும் அவனது எண்கள் செல்பேசியில் அழுந்தப்படும். குறைந்தது ஒரு நாளைக்கு ஓரிரு முறையாவது பேசிக்கொள்வார்கள். வேளைதவறாமல் குறுஞ்செய்திகள் வேறு அனுப்பப்படும்.

பெண்களிடம் எப்போதும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தன் அறை நண்பன் அடிக்கடி சொல்வது அவன் ஞாபகத்துக்கு வந்து போனது. அது தான் சரி என்று அவனை பற்றிய எந்த முழுவிவரத்தையும் சொல்லாமலே பேசி பழகி வந்தான். கொஞ்ச நாள் போனதும் அவளை சமாளிப்பது வெகு சுலபமாகி போனது. அவளும் தனக்கு ஒரு தங்கை மற்றும் ஒரு அக்காவுடன் பிறந்தவளாகவும் தாயார் தவறிவிட்ட தாகவும் சொன்னாள். அதனால் அவளை கண்டிக்க அக்காவை தவிர வேறு யாரும் இல்லை. மாறன் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி இருந்தான். தான் வங்கி கடன் வாங்கி வாகனம் வாங்கியதாக சொன்னான். அவளுக்கு மோகம் அதிகரித்து வண்டியின் மீதும் அவன் மீதும். நாட்கள் நகர நகர அவர்கள் முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரை தொலைபேசியில் பேச தொடங்கிவிட்டார்கள். அவப்போது சின்ன சண்டைகளும் வரும். மாறனின் நண்பர்கள் அவனை எச்சரித்தார்கள். அவன் கண்டு கொள்வதாய் தெரியவில்லை. அவள் ஞாயிற்று கிழமைகளில் எங்காவது வண்டியில் அழைத்து செல்லும்படி சொன்னாள். ஆனால் பெண்களை வண்டியில் எற்றிகொள்ளக்கூடது என்பது மாறனின் லட்சியங்களில் ஒன்று. அதுமட்டும்மல்லாது நண்பர்கள் யாரவது பார்த்துவிட்டால் இன்னும் சிக்கலாகிவிடும் என்பது அவனது பயம்.

ஒரு மழைநாளில் அவள் அலுவலகம் சென்றான். தொப்புற நனைந்து விட்ட அவனை ஈரம் துவட்டி உலரும் வரை உதவி செய்தாள். தன் அறைக்கு அழைத்து காபி தந்து உபசரித்தாள். மாறனுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அவள் முகத்தை பார்க்க பார்க்க வேயர்த்து விருவிருத்தது. அவளது மூச்சுக்காற்று இவனை சுட்டுக்கொண்டு இருந்தது. அவள் பார்வை இவனை காந்தமென்று இழுத்தது. அவள் இதழ் இவனை தின்று கொண்டிருந்தது. அவளை முத்தமிட எத்தனித்தவனாய் முன்னேற திடுமென்று சுதாரித்துக்கொண்டான். உடனே கிளம்பி ஓடோடி வந்து விட்டான் இவன் அறைக்கு. இரண்டு நாள் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தான். யாரிடமும் பேசவில்லை, சற்று கைதி போலவே ஒதுங்கி இருந்தான். பிறகு ஒரு வழியாய் தேறினான். ஓரிரு நாட்கள் கழித்து அன்றாட வேலை முடிந்து வீடு திரும்புகையில் அவளது செல்பேசி அழைப்பு. சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினான். வழக்கம்போல் என்ன ஆச்சு ஏன் வரல என்று ஆரம்பித்து இன்று அணிந்த வெண்மை நிறைந்த ஆரஞ்சு சுடிதார் அணிந்தது வரை பேசினார்கள். நாளை வருவதாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டான். இரவு முழுதும் கிளறிய கொள்ளிகட்டையாய் கனன்று கொண்டு இருந்தான்.

அடுத்த நாள் பிற்பகலில் அவள் அலுவலகத்தில் சந்தித்தான். சிவப்பு வண்ண சுடிதாரில் அவள் எரிந்துகொண்டு இருந்தாள். லேசான வியர்வையுடன் சற்று சாய்ந்து உட்கார்ந்தான். அவன் பின்னந்தலைக்கு கொஞ்சம் உயரத்தில் இருந்த காத்தாடி அவனது பரட்டை தலையை கலைத்துக் கொண்டிருந்தது. அவள் இயற்கை அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றாள். ஐந்து நிமிடம் கழித்து திரும்பி வந்து நடந்த வாரே பேச்சை தொடர்ந்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவள் கைப்பையில் வைத்திருந்த புகைப்படங்களை எடுத்து காண்பிக்கும் வாக்கில் அவனின் இருக்கையின் ஒரு கைபிடியில் அவனை உரசியவாறே உட்கார்ந்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை. இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை. இது நீயா, எப்ப எடுத்தது போன்ற கேள்விகளுடன் உரையாடல் போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பஞ்சாய் அவள். மாறன் அவள் கண்களை உற்று நோக்கி எதையோ படித்தவனாய் அவள் இதழில் முத்திரை பதித்தான். சில நொடிகளுக்கு பின் இருவரும் பிரிந்து அவரவர் இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.அவள் கண்ணில் நீர் வழிவதை பார்த்து பயன்கொண்டவனாய் திடுகிட்டுப்போனான். சில நிமிட மௌனத்திற்கு பிறகு மாறன் தன் வாகனத்தை கிளப்பினான். வீடு வந்து சேர்ந்ததும் அவன் குற்றவுணர்வுடன் குமுரிக்கொண்டிருந்தான். தவறு செய்து விட்டதாய் மலைத்துபோனான். மது அருந்தி விட்டு வந்து "அவ உக்காந்தா உனக்கு எங்க டா போச்சு புத்தி" என்று தனக்கு தானே வசுவுகளை வீசிக்கொண்டிருந்தான். அறை நண்பன் ஒருவனிடம் அடுத்த நாள் நடந்த விவரத்தை சொன்னான். அவன் அவளை விட்டுவிட்டு வேலையை பார் என்கிற தோரணையில் சீறி விட்டு சென்றான். உடனே செல்பேசி என்னை மாற்றிவிட்டான் மாறன். மூன்று மாத காலமாக தொடர்பில்லாமல் இருந்தனர். அவளது எண்ணையும் அழித்துவிட்டான்.

மாறனுக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைத்தது. நல்லதென்று, அவன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். பெண்கள் தொல்லை இல்லாத நல்ல வேலை. எவளிடமும் பொய் நிற்க வேன்டியத அவசியம் இல்லை. தீகாவிடமும் தொடர்பு இல்லாததை நினைத்து பெருமூச்சு விட்டான். அவ்வப்போது அவளை நினைத்து ஆசுவாசப்படுவான். அவள் நினைவில் தலையணை நனைவதுண்டு. காலச்சுழல் வேகமாக சுழல ஒரு நாள் மத்தியான வெயிலில் சாலையோர கடையில் நின்று இளநீர் குடித்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு அழகான பெண் குரல். திரும்பிப்பார்த்தால் தீகா. இளநீரோடு சேர்ந்த புத்துணர்ச்சி பெற்றான் மாறன். அவளுக்கும் புத்துணர்ச்சியை வாங்கி கொடுத்து விட்டு நகர்த்தினான் அவளையும் வாகனத்தையும். என்ன எப்படி இருக்க? என்று பரஸ்பரம் விசாரிதுக்கொன்டார்கள். தான் வேலையை விட்டு விட்டதாக சொல்கிறாள் அவள். ஏன் என்றதற்கு தன் அப்பா மாபிள்ளை பார்ப்பதாகவும் அதற்காக வேலையை விட்டதாகவும் சொல்கிறாள். இவனும் தனக்கு வேறு வேலை இல்லை என்றும் தான் மற்றொரு வேலை தேடுவதாகவும் சொல்லிவைத்தான். திரும்பவும் செல்பேசி எண்கள் பரிமாற்றப்பட்டது. சிறிய இடைவெளி விட்டு தன் வாகனத்தில் உட்கார்ந்தாள். அவளை உரிய இடத்தில் விட்டுவிட்டு மீண்டும் இரவு செல்பேசியில் அழைப்பதாக சொல்லிவிட்டு நகர்கிறான்.

அடுத்த நாள் சன் பண்பலையில் யாழ் சுதாகர் நினைத்தாலே இனிக்கும் வாசித்துக் கொண்டிருந்த வேலையில் அவள் ஞாபகம் வர செல்பேசியில் அழைத்தான் தீகாவை. மீண்டும் நடந்தவற்றிற்கு மன்னிப்பு ஏதும் கேளாமல், அவளை நேரில் சந்திக்க விரும்புவதாய் கூறுகிறான். அவளும் ஆமோதித்து விட்டு துண்டிக்கிறாள். புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் சமயத்தில் மெரினா கடற்கரையில் இருவரும் சந்திக்கிறார்கள். தீகா அவனை தொட்டு தொட்டு பேச. தொட்டு பேசும் பெண்கள் பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் பாதுகாப்பு தேடுவதாகவும் இருப்பார்கள் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருந்ததை நினைவு கூர்ந்தான். அவள் ஒரு கைவிரல்களோடு சேர்த்து பத்தானது. நேரம் சென்று கொண்டிருக்கையில் மாலை மயக்குகிறது, ஏதோ உணர்ச்சிவசப்பட்டவன் அவன் கண்ணத்தில் இதழ் பதிக்க அவள் வெட்கத்தோடு மணலில் கோலம்போட ஆரம்பிக்கிறாள். சற்று கனத்த அலைக்குப்பின்னால் அவள் வார்த்தைகளும் எழ ஆரம்பித்தன. தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டாள். அதற்கு மாறன் பதில் ஏதும் சொல்ல வில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை. தான் பெரிய கடனில் இருப்பதாகவும் அதை முடித்து விட்டு பிறகு தான் யோசிக்க வேண்டும் என்றும் அதற்கு இன்னும் ஐந்து வருடங்களாவது வேண்டும் என்றும் சொன்னான். தான் இன்னும் ஒன்னரை வருடங்கள் வேண்டுமானால் காத்துக்கொண்டிருக்க முடியும் என்று பதிலுக்கு அவளும் தெரிவித்தாள். இவனும் யோசிப்பதாக சொல்லிவிட்டு கடல் அலைகளை தனியே விட்டு விட்டு திரும்பினார்கள். நண்பர்களின் புகைமூட்டத்தில் உட்கார்ந்து யோசித்து விட்டு சென்றான். தனக்கு எந்த விதத்தில் இவள் பொருந்துவாள் என்று சிந்தனை ஓட்டத்தில் திளைத்திருந்தான். ஒரு நாள் ஒரு ஆசாமி அவளிடம் ஏதோ ஏடா கூடமாக கேட்க அவள் பக்கா சென்னை வாசி என்பதை நிரூபித்தாள், அவ்வளவு வசவுகள். அவனை அந்த போடு போட்டவள் தன்மீது பாயாதது கண்டு அதிசயித்தான். பிறகு அவளுடன் நடந்த சில சண்டைகளில் அவள் கருத்துக்கள் பல ஏற்க முடியாமல் இருந்ததும் நினைவிற்கு வந்தது. ஆனால் அவள் மேல் வந்திருப்பது காதல் இல்லை என்பது வரை நிதானமாய் இருந்தான்.

அன்று சனிக்கிழமை அவளது அடுக்கு மாடி குடியிருப்புக்கு அழைத்தாள். அவளுடைய அப்பா பாண்டிச்சேரி சென்றிருப்பதாகவும், அவள் தங்கை தன் அக்கா வீட்டிற்கு சென்று இருப்பதாகவும் அவர்கள் வர இரவு வெகு நேரம் ஆகும் என்பதையும், மாறனிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதையும் சொன்னாள். பகல் இரண்டு மணி அவள் வீட்டை அடைந்தான். பகல் உணவு பரிமாறினாள். தான் சாப்பிட்டு முடிக்கும் வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் படி கூறினாள். மாறனும் தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். தீகாவும் முடித்துவிட்டு வந்தால் அவளும் அதே படுக்கையில் அவன் தோளில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். முதுகுவலியால் சற்று சிளும்பளுடன் திரும்புகிறான் மாறன். அவள் ஏதும் அறியாதவளாய் விழிக்க, மேற்கொண்டு தீண்டல்கள் நடக்கிறது. பூமி அதிர்ந்தது போல் திடுக்கென்று விழித்து கொள்கிறான் மாறன். அவளும் தன்னை விடுவித்து கொள்கிறாள். அவளின் ஆதங்கம் இன்னும் அதிகமாகிறது. சற்று நேரம் பேசிவிட்டு வழியனுப்பி வைக்கிறாள் அவள்.

இம்முறை இருவரிடமும் எந்த வித சலசலப்பும் இல்லை அவளும் எந்த கோரிக்கையும் வைக்க வில்லை. இவனுக்குள் பல கேள்விகள். அவள் என்ன எதிர்ப்பார்கிறாள் நட்பா? காதலா? காமமா? நட்பென்றால் தொடுதல் இருக்காது. காதல் என்றால் இத்தனை அவசரம் ஏன்? காமம் என்றால் அதற்கு என்ன அவசியம்? யோசித்துக்கொண்டே தூங்கிப்போனான். ஆனால் அவன் அவள் திருமணம் முடிப்பதென்பது நினைத்து பார்க்க முடியாததாக இருந்தது. அவள் ஏன் திருமணத்திற்கு கட்டாயப்படுத்த வில்லை,தான் மேற்கொண்டு என்ன செய்வது என்பன அவன் மூளை திரையில் ஓடிக்கொண்டு இருந்தது.

மன உளைச்சலில் துவண்டு போய் பெங்களூரு சென்று விட்டதாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தான். மீண்டும் மூன்று மாத கால இடைவெளி. இந்த முறை ஒரு திரை அரங்கத்தில் அவன் நண்பர்களோடு வட்டமாக நின்றுகொண்டு இருப்பதை அவள் பார்த்துவிட்டாள். அடுத்த நாள் அவன் பழைய செல்பேசி எண்ணை அழுத்தினாள். பரஸ்பர பேச்சு முடிந்து அவனை சந்திக்க விரும்புவதாகவும் தனது வீட்டிற்க்கு வரும்படியும் சொல்லிவிட்டு செல்பேசியின் சிகப்பு நிற பொத்தானை அழுத்தினாள். அடுத்த வாரமே அடுத்த சந்திப்பு நடந்தது அவளது வீட்டில். இம்முறை உரையாடலில் தொடங்கி உடலாடலில் முடிந்தது. எல்லாம் முடிந்து விட்ட நிலையில் அவள் காற்றில் மிதந்து கொண்டு இருந்தால். ஆனால் அவன் கண் சிவந்து கொண்டு இருந்தது. ஓரமாக கண்ணீர்." ஏய் என்ன ஆச்சு?", இது அவள். அவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். அவள் சலனமற்றவளாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பொய் குளித்து விட்டு வந்து தொலைக்காட்சியை பார்த்தபடியே வந்து உட்கார்ந்தான்.

இம்முறை அவன்,"என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்த மாடியே?". ஹ ஹ என்று அவள் வாய் விட்டு சிரித்துவிட்டு. இதுக்கா அழுத அடப்பாவி.அது உன் இஷ்டம். உண்ண மாதிரி ஒரு பயன்தாகோலிய கட்டிகிறதா? அத விட............ என்று எந்த வித குற்றவுணர்வும் இல்லாமல் சொன்னாள். அவன் மனசாட்சியோ அவனிடம் மல்லுகட்ட அவளிடம் இருந்து விடை பெற்று. தனது வாகனத்தை உதைத்து கிளப்பினான். வண்டியின் புகையோடு அவர்கள் கற்பும் காற்றில் கலந்தது மெல்லிய பெட்ரோல் வாசனையோடு.

அட சே! இதுக்கா பயந்தோம் ?அவன் உதடுகள் வார்த்தைகளோடு புன்னகையும் உதிர்த்தது எதையோ சாதித்துவிட்டவனாய்.

ஹும், இவர்கள் பேதைகளா? புத்திசாலிகளா?

16 March 2008

தோல்விகள்



என் ஆறாவது வயதில்
மழை நீரில் கவிழ்ந்து விட்ட
எனது காகித கப்பல் - என்
முதல் தோல்வி
நான் கப்பல் விடுவதை நிறுத்தவில்லை

என் ஏழாவது வயதில்
நான் செய்த முதல் பட்டம்
காற்றடித்து கிழிந்து போனது - என்
இரண்டாவது தோல்வி
நான் பட்டம் செய்வதை நிறுத்தவில்லை

என் எட்டாவது வயதில்
நடு ஆற்றில் உடைந்து விட்ட
வாழை மர படகு - என்
மூன்றாவது தோல்வி
நான் படகு செய்வதை நிறுத்தவில்லை

என் ஒன்பதாவது வயதில்
நான் ஓட்டிய மிதிவண்டியால் பட்ட
படுகாயம் - என்
நாலாவது தோல்வி
நான் மிதிவண்டி ஓட்டுவதை நிறுத்த வில்லை

என் பத்தாவது வயதில்
மீன் பிடிக்க போய் வெற்றுத்
தூண்டிளோடு திரும்பியது - என்
ஐந்தாவது தோல்வி
நான் மீன் பிடிப்பதை நிறுத்தவில்லை

என் பதினோராவது வயதில்
நான் நட்டு வைத்து வளராமல் போன
முதல் செம்பருத்தி செடி - என்
ஆறாவது தோல்வி
நான் செடி வளர்ப்பதை நிறுத்த வில்லை

உனக்காய் காத்திருந்து
காய்ந்து கருகிவிட்ட எனது
கருப்பு ரோஜா கூட - என்
தோல்வியின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது
நான் காத்திருப்பதை நிறுத்தப்போவதில்லை

இப்படி நான் கண்ட தோல்விகள் நூரைத் தொடும்
இப்போது கூட
உனக்கான முதல் கவிதை எழுதும்
முயற்சியில் நான்....

16 February 2008

மழைக்கவிதை-4


தயவுசெய்து நனையாதே
உன்னை முத்தமிடுவதாய் கற்பனை
செய்கிறது மழை

-------------------------------------------------

நீ சிரித்தால்
இடி இடிகிறதென்று - என்
இதய வானில் மழை பெய்ய
ஆரம்பித்து விடுகிறது.

--------------------------------------------------

விண்ணில் கார்மேகத்தின் ஆடை களையப்பட
வெட்கம் தாளாமல்
மண்ணில் ஓடி மறைக்கிறது மழை.

13 February 2008

மழைக்கவிதை-2

எப்போது மழை வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என்னை உன் குடைக்குள் அழைப்பாய்

எப்போது இடி இடிக்குமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என் இடக்கையை உன் வலக்கையால் பிடித்துகொள்வாய்

எப்போது மின்னல் வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே இருக்க கண் மூடி என் பெயர் உச்சரிப்பாய்

எப்போது உன் மீது சேறு படுமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே கோபத்தோடு வெட்கப்படுவாய்

எப்போது காற்றடிக்குமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே உன் துப்பட்டா என் தலை துவட்டும்

எப்போது எனக்கு காய்ச்சல் வருமென்று காத்திருக்கிறேன்
அப்போது தானே என் நெற்றியில் உள்ள பத்தோடு, பதினொன்றாய் கிடைக்கும் உன் முத்தம்


மழையோடு காத்திருக்கிறேன் நான்
மீண்டும் வருவாயா நீ?

06 February 2008

மழைக் கவிதை

வில்மரங்கள் விடும் காற்றம்பினால்
வலி தாங்காமல் அழுகிறது வானம்.
---------------------------------------------------------

நானும் அவளும் சந்தித்த
அந்த முதல் நாளில் பெய்த
மழையின் ஈரம் இன்னும் காயவில்லை
தொடர்கிறது கானல் நீராய்.
---------------------------------------------------------

மழை பெய்யும் பொழுது வரும்
"சோ" வென்ற சப்தம்
வாழ்வில் எத்தனை பேருக்கு
பின்னணி இசையாய்......?
---------------------------------------------------------

பெருவாரியான
ஆண்கள் அழும்போது
மறைய நினைப்பது
மழையில் தான்.
---------------------------------------------------------