என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

03 June 2009

மதுவும் மதுவும்


அன்பே,
உன்னை பார்த்த கணமே
என் பரவசம்
நூறு சதவிகிதத்தை அடைகிறது

உன்னை
தொடும்போதே வயது குறைந்து
குழந்தை ஆகிவிடுகிறேன்

உன்னை
என் கைகளில் ஏந்தி
கண்ணத்தில் முத்தமிடுகையில்
மெய்மறந்து போகிறது

உன்னை
தலை திருகி மார்பணைத்து
உச்சு முகர்கையில்
மின்சாரம் பாய்கிறது

உன்னை
குப்பிக்குள் இருந்து விடுவித்து
கோப்பைக்குள் தள்ளும்போது
பெருக்கெடுக்கிறது பேரானந்தம்

உன்னை எனக்குள்ளும்
என்னை உனக்குள்ளும் கலக்கும்
போது தான் பிறந்த பலனை
அடைவதாய் உணர்கிறேன்

நீ மாயையாம்
நீ மதிகெடுப்பாயாம்
நீ மயக்கிவிடுவாயம்
நீ விஷமாம்
நீ உயிர்கொல்லியாம்
நீ நரகமாம்

அவர்களுக்கு என்ன தெரியும்?
உன்னை விட
கொடியவள்
அவள் தானென்று....

1 comment:

  1. இது கவிதை துளிகள் அல்ல
    கிழக்கு ஆப்பிரிக்காவின் டான்ஸானியாவின்
    சரிகம சங்கத்தில்
    நீ அடித்துத் துப்பிய கிலிமஞ்சாரோ துளிகள் அல்லவோ...

    ReplyDelete