என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

28 February 2011

பயணம்(5) - காங்கோ

காங்கோ(Democratic Republic of Congo) சுருக்கமாக DRC. தமிழில் ஜனநாயக குடியரசு காங்கோ(ஏதோ என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு).
1908ல் பெல்ஜிய நாட்டின் காலனியாக இருந்த பெல்ஜியம் காங்கோ 1960ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. முந்தய அறுபதுகளில் சரியான அரசியல் அமைப்பு குறைபாடுகளினால் நிலையான சமூகத்தை உருவாக்க இயலவில்லை. 1965 இல் மொபுடு(Mobutu) என்பவரால் ஆட்சி கைப்பற்றப்பட்டு சர்வதிகார அட்சி நடை பெற்றது. அப்போது பெல்ஜியம் காங்கோ ஜைரே(zaire) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முப்பத்தி இருண்டு வருட சர்வாதிகாரதினாலும் முறை கேடான ஆட்சியினாலும், இனக்கலவரங்கள் உள்நாட்டு சண்டைகள் என்று அமைதியிழந்து காணப்பட்டது. பிறகு ருவாண்டா மற்றும் உகண்டா நாட்டின் உதவியுடன் லாரன்ட்கபிலா (Laurent Kabila) என்பவரால் ஆட்சி கைப்பற்றப்பட்டு ஜனநாயக குடியரசு காங்கோ(Democratic Republic of Congo) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்கிறது வரலாறு.  
கின்ஷாசா வை தலைநகராகக் கொண்டது DRC(ஜனநாயக குடியரசு காங்கோ). நான் கின்ஷாசாவிற்கு பயணம் செய்வது குறித்து நண்பர்களிடம் பேசிய போது  திரைபடங்களில் வருவது போல் பயங்கரமாக இருக்கும் பார்த்துக்கொள் என்றும் பயம் கலந்த நம்பிக்கை தந்து அனுப்பினர். திருமணத்திற்குப் பிறகு செல்லும் முதல் பயணம் என்பதால் லேசான பயமும் புதிய இடம் என்பதால் சிறு குழப்பமும்