என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

26 January 2011

பயணம்(4) - நைஜீரியா

லாகோஸ், நகரம் நைஜீரியா: 2009' டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி இரவு எட்டு மணிக்கு தரை இறக்கப்பட்டோம். சுமார் ஒன்பது மணி நேர பயணம். ஆனால் (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்) அமீரக விமான சேவையால் களைப்பு தெரிய வில்லை. என்னோடு இணைந்து எங்கள் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரும் பயணித்தார். அவர் பயணம் செய்யும் இரண்டாவது ஆப்ரிக்க நாடு.  இரண்டு வருடங்களுக்கு முன்பு சோமாலியாவிற்கு சென்ற அனுபவம் உள்ளதாக கூறினார்.
விமானம் தன் பயணம் முழுவதும் எங்கள் பயண அனுபவங்களை பகிர்வதொடு பறந்தது. விமானத்தில் பரவலாக மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. வியாபாரத்திற்காக செல்லும் ஆசியர்கள் மற்றும் இதர ஆப்ரிக்க நாட்டு மக்களும் நிறைந்திருக்க,

13 January 2011

விதி விலக்கு

உன் விழிகளை பார்த்த பிறகு
உன்னையே சுற்றி வருகின்றன
மின்மினி பூச்சிகள் சிறைபடுத்திய
தன் இனத்தை திருப்பித்தர வேண்டி

உன் இதழ்களை பார்த்த பிறகு
மலர்ந்தவுடன் உதிர்த்து விடுகின்றன
ரோஜாக்கள்
உனது இதழ்கள் வேண்டி

உன் கன்னங்கள் பார்த்த பிறகு
வடிவம் மாறிப்போகின்றன
மாங்கனிகள்
உனது கன்னங்கள் வேண்டி

உன் விரல்கள் பார்த்த பிறகு
மீட்ட சொல்லி அழைக்கிறது
வீணை
உன் தொடுதல் வேண்டி

உன் பாதங்கள் பார்த்த பிறகு
இறங்கத் துடிக்கிறன
பனித்துளிகள்
மென்மையான இடம் வேண்டி

உன் செவிகள் பார்த்த பிறகு
வெக்கி தலை குனித்து
கேள்விக்குறியாகிறது
ஆச்சர்யக்குறி(!?)

உன் இடையில் தவழும்
கைப்பைக்குக் கூட கர்வம்
உன் இடையில் தவழ்வதால்

அக்றினைகளே ஆசைப்படும் பொழுது
நான் மட்டும் என்ன
விதி விலக்கா?

-இளயுகன்