என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

15 December 2010

பயணம்(3) - சாம்பியா

மீண்டும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு பயணித்த நாடு சாம்பியா. சாம்பியாவின் தலைநகரம் லுசாக்கா. மீண்டும் துபாயிலிருந்து ஐந்து மணி நேர பயணமாய் நைரோபி தொடர்ச்சியாய் மூன்று மணி நேர இடைவெளி மீண்டும் இரண்டரை மணி நேர பயணம். கென்யா-விமானம் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் வந்திறங்கியது லுசாக்கா மண்ணில். சென்ற முறைப்போல் அவசரமோ எதிர்ப்பார்ப்போ  எதுவும் இல்லை. லுசாக்கா விமான நிலையம் மிகவும் சிறியது. விரைவில் வெளியேறும் ஆவலில் பயணிகள் எல்லோரும் முனைந்திருக்க நானோ அருகில் நின்ற ஆப்ரிக்க பிரஜை உயரத்தை கணக்கிட்டு கொண்டு இருந்தேன்.

சாம்பியாவில் நுழைய விசா பிரச்சனைகள் குறைவு. பயணிப்போர் வர்த்தகம் தொடர்பான பயணத்தை மேற்க்கொண்டால் சம்மந்தப்பட்ட சக

13 September 2010

முதல் இரவு



கண்கள் காதல் சொன்னால்
கன்னங்கள் வெக்கம் சொல்லும்
எண்ணங்கள் எழுந்து நின்றால்
ஏக்கங்கள் கொழுந்து விடும்
பக்கங்கள் பழகியிருந்தால்
பாவங்கள் சொல்லிவிடும்
கால்கள் நான்கிருப்பதால்
கட்டில்களும் நடனமிடும்
விதிகள் தெரிந்தாலும்
விகிதங்கள் மாறிவிடும்

என்னருகே நீ
உன்னருகே நான்
நம்மை பார்த்து
நகைக்கிறது நாணம்!

30 August 2010

இடம்

                 
                                                                                                      
பம்பரம் விட்டது
பச்சக்குதிரை தாண்டியது
கிட்டிப்புல் அடித்தது
கிணற்றில் மிதந்தது
கோலிகுண்டு ஆடியது
கோழிக்கு வலையிட்டது
ஆற்றில் மீன் பிடித்தது
ஆலவிழுதில் தொங்கியது
மாங்காய் பறித்தது
மணலில் புரண்டது

25 August 2010

பயணம்(2) - தான்சானியா


நைரோபியிலிருந்து தொடர் பயணமாய் தான்சானியாவின் தர்-எஸ்-சலாம். நைரோபியிளிருந்து ஒன்னேகால் மணி நேர விமானப் பயணம். தர்-எஸ்-சலாம் கடலோர பகுதி என்பதால் அழகும் அதே நேரம் வெப்பம் நிறைந்த பகுதியும் கூட. சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆப்ரிக்க நா(கா)டுகளில் முக்கியமானதாக விளங்குகிறது தன்சானியா.

கலைப்பில்லாத சிறிய பயணம். விமான நிலையம் இறங்கியவுடன் ஐம்பது டாலர் கொடுத்து விசா வாங்கியாகிவிட்டது. என்னை அழைத்து கொண்டு போக காத்துக்கொண்டிருந்த நண்பர் மற்றும் தொழில் தோழரோடு கைக்குலுக்கி கிளம்பினேன் தன்சனியாவின் காற்றை சுவாசிக்க. நான் தர்-எஸ்-சலாமை அடைந்த நேரம் கதிரவன் கரை இறங்கிவிட்டதால் நாங்கள் செல்லும் சாலை தவிர வேறொன்றும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பயண புராணத்தை தொழில் தோழரோடு பகிர்ந்து கொண்டே செல்ல, தங்குமிடம் வந்து சேர்ந்தது.

31 July 2010

தோழியாய்




தோழியாய்!!

முதன் முதலாய்
காதலைச் சொல்ல பயந்த எனக்கு
மீசை வலித்துவிடச் சொல்லி நீ கொடுத்த
ஒரு ரூபாய் நாணயம்
இன்னும் எனது பெட்டகத்தில்....

எப்போதாவது 
நல்ல மேல்சட்டையோடு வரும் எனக்கு
ஒரு புண் சிரிப்போடு நீ கொடுக்கும்
விமர்சனம்
இன்னும் எனது ஞாபகத்தில்....

30 June 2010

பயணம் ( பாகம்1)

வெளிநாட்டு பயணம் என்றவுடனே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் தான் நம் எல்லோர் நினைவிலும் வரும். நம் உலக வரைபடத்தில் இன்னும் ஓர் முக்கிய கண்டம் எல்லா இயற்கை வளங்களும் இருந்தும் இன்னும் பின்தங்கிய தாகவே உள்ள ஒரு கண்டம். அது ஆப்ரிக்க கண்டம்.

என் தொழிற்துறை ஆகிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்ப வர்த்தகத்திற்கு மிக முக்கியமான சந்தை ஆப்ரிக்கா. ஆகவே கடந்த இரண்டு வருடங்களாக துபாயில் இருந்துகொண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு அடிகடி பயணித்து வருகிறேன். அங்கு போய் வந்த அனுபவங்களே இந்த வலைப்பூ பூப்பதற்கு காரணம். ஒவ்வொரு நாட்டின் அனுபவங்களையும் ஒவ்வொரு பாகமாய்  எழுதுவதாய் எண்ணம். இங்கு தொழில்நுட்பம் எழுதபோவதில்லை மாறாக மனிதநுட்பம்.

மதிநுட்பத்தின் பலனாய் பல இன்னல்கள், மனித நுட்பத்தின் இன்னல்களால் சில பயன்கள். தொழில்நுட்பம் எழுதுவதைவிட  மனித நுட்பம் எழுதுவதிலேயே ஆர்வம் தலைபடுகிறது என்னை விட திறமையான தொழில்நுட்பவாதிகள் இருப்பதால்.

பயணிப்போம்....

12 June 2010

முத்தம்


கொடுத்ததற்கான அடையாளம்
உன்னிடமும் இல்லை
பெற்றுக்கொண்டதற்கான அடையாளம்
என்னிடமும் இல்லை
காற்றில் கறைந்து செல்கிறது
நம்
கைப்பேசி முத்தம்!

-பவித்ரா


16 May 2010

தாவணிக் கணைகள்


அடிக்கடி கவிதை கிறுக்கும்
எனக்கு - உன் பெயரையும்
என் தொகுப்பில்
சேர்க்க தோன்றுவது ஏன்?

அடிக்கடி கடந்து போகிற
சராசரி பார்வை
உன் விழியிலிருந்து மட்டும்
விலக மறுப்பது ஏன்?

அடிக்கடி கேட்கிற
மெல்லிசை கூட
உன் குரலிசை கேட்டதும்
அடக்கி வாசிப்பதேன்?

அடிக்கடி அம்மா கட்டுகிற
பூக்கள் கூட
உன் நலம் விசாரிக்கும்போது
முகம் வாடி போவதேன்?

அடிக்கடி கரைக்கு வரும்
மீன்கள் கூட
உன் வருகை கண்டு நீருக்குள்
திரும்ப மறுப்பதேன்?

அடிக்கடி வெளியூர் செல்லும்
நீ - திரும்பும்போது மட்டும்
வண்ணத்துபூச்சிகள் நிறங்கள்
கூட்டுவது ஏன்?

அடிக்கடி சண்டையிடும்
உயர்திணைகள் கூட
உன்னை பார்த்த மாத்திரத்தில்
நாகரிகமாகிப் போவதேன்?

அடிக்கடி தொடர்பற்று போகும்
மின்சாரம் கூட  ஏற்படுத்தாத பாதிப்பு
நீ தொடர்பற்று போகும் போது
ஏற்படுவது ஏன்?

அடிக்கடி வானம் பார்க்கும்
எனக்கு
உன் முகம் மட்டும்
முழு நிலவாய் தெரிவது ஏன்?

விடை அறிந்தாலும் விளக்கம் அளிப்பாயா?

11 April 2010

இதையும் தாண்டி

சாலையில் பிச்சை எடுக்கும்
சிறுவர்கள்
காலையில் கடன் சொல்லும்
ஆத்மாக்கள்
போதையில் விழுந்து கிடக்கிற
குடிமகன்கள்
பாதையில் கடை விரிக்கும்
வியாபாரிகள்
பாடையில் பயணிக்கிற
நன்மக்கள்
நடைமேடையில் சண்டை போடுகிற
பேச்சாளர்கள்
சிலேடையில் சத்தியம் செய்யும்
அரசியல்வாதிகள்
பாத்திரம் அறிந்த
சாமிகள்
சூத்திரம் அறியா
ஆசாமிகள்
ஓடையில் குப்பை பொறுக்கும்
குழந்தைகள்
ஓடுக்கு கை நீட்டும்
பாமரர்கள்
எல்லோரும் நத்தையாய்
நகர்ந்துகொண்டிருக்க

அரக்க பறக்க அன்றாடம்
கணினியோடு மல்லுகட்டும்
நான்
முதல்முதலாய் ஊடுருவி பார்க்கின்றேன்
என்னை
சுற்றி உள்ள
கண்ணாடி சுவற்றின் வழியே
உந்திய வேகம் உரையும் வரை....

   

26 March 2010

வெற்றி


வெகுதூரத்தில் வெண்ணிலவும்
வெக்கித்துடிக்கிற நீயும்
வேகமாய் பரவுகிற நெருப்பும்
வென்று விட துடிக்கிற நானும்
தண்ணீரே இல்லாமல்
தோனி போல் தள்ளாடுவது தான்
கலவியா !
நாம்
வென்றுவிட்டோமா
அன்பே!

16 March 2010

தேடல்

அப்போது

நான் புதிதாய் பட்டம் வாங்கிய
பட்டதாரி இளைஞன்

மாற்றுவதற்கு தோதாய் இருந்த
ஓரிரண்டு உடுப்புகளோடு
வேலை தேடும் துடிப்போடு
வந்து சேர்ந்த இடம்
சென்னை
என்னை வரவேற்றது
புகயும் இரைச்சலும் கலந்த
புளித்த வாடையோடு

பத்து மணி நேர
பயண களைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில்
அறை நண்பர்களின் நடை உடைகள்,

முதல் முதலாய் நண்பனின் துணையோடு
ஏறிய
மின்சார ரயில் வாசனை இன்று வரை என் நெஞ்சோடு

வந்த முதல் நாளே
ஒரு பயிலிடதில் எனது
முதல் நேர் முகத் தேர்வு
வந்தவர்களை பார்த்தவுடனே தோற்றுவிட்ட
ஏக்கத்தில் கழிந்தது சென்னையில்
எனது முதல் இரவு

கவிதை


                ஆறடி கவிதைக்கு 
                அரை  அடியில்  தலைப்பிட்டார்கள்
                பவித்ரா  என்று!