என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

16 March 2010

தேடல்

அப்போது

நான் புதிதாய் பட்டம் வாங்கிய
பட்டதாரி இளைஞன்

மாற்றுவதற்கு தோதாய் இருந்த
ஓரிரண்டு உடுப்புகளோடு
வேலை தேடும் துடிப்போடு
வந்து சேர்ந்த இடம்
சென்னை
என்னை வரவேற்றது
புகயும் இரைச்சலும் கலந்த
புளித்த வாடையோடு

பத்து மணி நேர
பயண களைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில்
அறை நண்பர்களின் நடை உடைகள்,

முதல் முதலாய் நண்பனின் துணையோடு
ஏறிய
மின்சார ரயில் வாசனை இன்று வரை என் நெஞ்சோடு

வந்த முதல் நாளே
ஒரு பயிலிடதில் எனது
முதல் நேர் முகத் தேர்வு
வந்தவர்களை பார்த்தவுடனே தோற்றுவிட்ட
ஏக்கத்தில் கழிந்தது சென்னையில்
எனது முதல் இரவு

அடுத்த இரண்டு மூன்று நாட்கள்
அறையை விட்டு வெளியே வராமல்
படித்துக்கொண்டிருந்தேன் வழக்கமாய்
படிக்கும் ஆனந்த விகடனையும்
அதற்கு துணையாய் குமுதமும்
நேற்முக தேர்விற்கு என்ன படிப்பத்தென்று புரியாமலும்
வாழ்க்கையை தொடர்வதற்க்கு வழிகள் தெரியாமலும்.

சில கல்லூரி நண்பர்களை தேடி அலையும்
சாக்கில் கழிந்தது அடுத்த பத்து நாட்கள்-ஒரு
சிறிய பயத்தோடு

மேலும் கையில் கொண்டு வந்த என்னுற்றி ஐம்பது ரூபாயுடன்
முடிந்து போனது
முதல் மாதம்

இரண்டாவது மாதம் தொடங்கி
இரண்டு நாட்காளே ஆனா போது

ஒரு ஆயிரம் ரூபாய் காசோலை வந்திருந்தது
ஒரு வங்கியில் கணக்காளரும்  
என் நண்பருமான
எனது தந்தையிடமிருந்து

அன்று சனி இரவு
அறையில் நண்பர்களின் புகையோடு சேர்ந்து
நானும் மதுவின் மயக்கத்தில் மூழ்கி இருந்த போது
பகுதி நேர வேலை ஒன்று காலி இருப்பதாக
படித்துகொண்டே வேலை பார்க்கும் அறை நண்பனிடமிருந்து
வந்து விழுந்தன வார்த்தைகள்
போதை எறிவிட்டதற்கு அடையாளமாய்

திங்களன்று
காலைமுதல் மாலைவரை ஒரு வெற்றிடம்
எப்போது கிடைக்கும் என்னகென ஒரு இடம் என்பதாய்

மாலையில் வேலைக்கான இடத்திற்கு சென்றதும்
வித்தியாசமான தேர்வில் வென்றதும்

ஒவ்வொரு கேள்விக்கும் எனது பதில் முற்றிலும்
ஒரு வார்த்தையாக அல்லது
ஒரு வரியாக

வேலை நேரத்துக்கான நிபந்தனையுடன்
ஆயிரம் ருபாய் சம்பள நிர்ணயம்

பனை ஓலையால் வேய்ந்த கூரயினுள்
சிறிய வட்டமாய் சூரிய ஒளி
விழுவது போல
என் வாழ்க்கைக் கூரையின்
மீதும் மூன்று வட்டமாய் விழுந்தது
என் ஆயிரம் ரூபாய் சம்பளம்
மெலிதான புன்னகையோடு

அன்றிலிருந்து
காலை முதல் மதியம் வரை
முழு நேர வேலை தேடுவதாயும்
மாலையில் பகுதி நேர வேலையை தொடர்வதாயும்
எண்ணம்
வெறும் எண்ணமாய்

தேவைகள் அதிகமானதும்
பகுதி நேர வேலை
முழு நேரமாகிபோனது
ஆயிரம் இரண்டாயிரம்
ஆனது தான் மிச்சம்

ஆறுமாதம் கழிந்த பிறகு
லேசாய் முளைத்தது குட்டிச் சிறகு
வயதிற்கு வந்த ஆண்மகனின் அரும்பு மீசையை போல

நான்கு வருட பட்டத்திற்கு
நன்று கிடைத்த சன்மானம் வெறும் இரண்டாயிரமா
எழுந்தது கேள்வி
என்னுள்-முட்டை ஓட்டுக்குள் இருந்து வெளிவரும் கோழி குஞ்சென


கற்பனையாக, ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டதென
கதை கட்டி கழன்று கொண்டுவிட - அந்த
வேலைக்கும் முழுக்கு

உண்மைக்கு மட்டும் தான் தெரியும் எனது பரிதாப நிலை
எப்போதும் பொய்க்கும் மட்டும் தானே நிறைந்த விலை

சென்னை பழகிவிட்ட முதிர்ச்சியில்
என்னை விட திறமை சாலிகளிடம்
போட்டி போட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம்

ஐயாயிரம்  ரூபாய் தந்தால் வேலை என்ற அறிவிப்பு
ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் 
ஆயிரம் முறை யோசித்து ஒப்புக்கொண்டேன்

(1000 முறை யோசிபிற்க்கு காரணம் 5000 ரூபாயை எங்கிருந்து புரட்டுவது என்பது தான்)

பல பரிசோதனைக்கு பிறகு வேலை கிடைத்தது
பல் பிடித்து பார்க்கப்பட்ட பசு மாடாய் நான்

செல்பேசியும் இரு சக்கர வாகனமும்
என் வேலையை தீர்மானிப்பதாகப்பட்டது-நண்பர்களை
செல்லறித்து இரண்டையும் வாங்கியாகிவிட்டது

பயணமும் தொடர்ந்தது
பாய்மர கப்பலில் பயணிக்கும் வகையில்

ஓடின இரண்டு வருடங்கள்
என் இரு சக்கர வாகன உதவியுடன்


இதற்கிடையில்
இரண்டு முறை வாகனம்

இரண்டு முறை செல்பேசி
இரண்டு முறை தங்கும் அறை - மாற்றியாகிவிட்டது


மீண்டும் முளைத்தன கரிய பெரிய சிறகுகள்
சிட்டு குருவி பருந்தான கற்பனையில்
மீண்டும் வேலை வேட்டை

உள்நாட்டில் கற்றுக்கொண்ட வித்தைகளை
வெளிநாட்டில் விற்க தயாரானேன்
காரணம்
பொருளாதாரம்

உலக வரைப்படத்தில் தினமும் தலை வைத்து
உறங்குவது வழக்கமாகிப்போனது

என் வரைப்படத்தில் தேய்ந்து போன அரபு நாட்டில் வேலை
உறைவிடம் தேடிலயப்போவது தெரியாத நாளை

பிரிந்தேன் நண்பர்களையும் குடும்பத்தாரையும்
திரிந்தேன் பாலைவனத்து ஒட்டகமாய்

திரை கடல் ஓடியும்
திரவியம் கிடைக்கவில்லை
மாறாக தனிமையும் வெறுமையும்

பொருளை தேடி
இருளாய் ஆகும் வாழ்க்கை

ஊர் விட்டு ஊர்
நாடு விட்டு நாடு
கண்டம் விட்டு கண்டம்-இப்படி
சுற்றுக்கிற உலகத்தை நாளும் சுற்றுக்கிற பிழைப்பு

இப்போது கூட
கிழக்கு ஆப்பிரிக்காவிண் ஒரு கோடியில் அமர்ந்துகொண்டு
தொலைத்து விட்ட ஏதோ ஒன்றை
தேடிக்கொண்டு இருக்கிறேன் என் கணினியின் உதவியோடு

படைத்து விட்ட இறைவன் பார்வையில்
கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நிகழ்வும்

கருப்பாய் இருக்கிற உலகம்
வெளுப்பாய் மாறுகிற ஒவ்வொரு நாளையும்
எதிர்நோக்குகிறேன் ஏதோ ஒரு எதிர்பார்ப்பொடும்
அதற்க்கு புரியாத அர்த்தங்களோடும்


தேடல் தொடருமா....?
 

No comments:

Post a Comment