
தோழியாய்!!
முதன் முதலாய்
காதலைச் சொல்ல பயந்த எனக்கு மீசை வலித்துவிடச் சொல்லி நீ கொடுத்த
ஒரு ரூபாய் நாணயம்
இன்னும் எனது பெட்டகத்தில்....
எப்போதாவது
நல்ல மேல்சட்டையோடு வரும் எனக்கு
ஒரு புண் சிரிப்போடு நீ கொடுக்கும்
விமர்சனம்
இன்னும் எனது ஞாபகத்தில்....