சிறுவர்கள்
காலையில் கடன் சொல்லும்
ஆத்மாக்கள்
போதையில் விழுந்து கிடக்கிற
குடிமகன்கள்பாதையில் கடை விரிக்கும்
வியாபாரிகள்
பாடையில் பயணிக்கிற
நன்மக்கள்
நடைமேடையில் சண்டை போடுகிற
பேச்சாளர்கள்
சிலேடையில் சத்தியம் செய்யும்
அரசியல்வாதிகள்
பாத்திரம் அறிந்த
சாமிகள்
சூத்திரம் அறியா
ஆசாமிகள்
ஓடையில் குப்பை பொறுக்கும்
குழந்தைகள்
ஓடுக்கு கை நீட்டும்
பாமரர்கள்
எல்லோரும் நத்தையாய்
நகர்ந்துகொண்டிருக்க
அரக்க பறக்க அன்றாடம்
கணினியோடு மல்லுகட்டும்
நான்
முதல்முதலாய் ஊடுருவி பார்க்கின்றேன்
என்னை
சுற்றி உள்ள
கண்ணாடி சுவற்றின் வழியே
உந்திய வேகம் உரையும் வரை....