பயணம்
வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல பயணம்
என்னை பற்றி
நான் இளயுகன்....
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.
View my complete profile
30 October 2009
நிச்சயதார்த்தம்
புதிதாய் வார்க்கப்பட்ட கவிதை
ஒன்று
என் தொகுப்பில் சேர்க்கப்பட்டது
இன்று
எனது
நிச்சயதார்த்தம்!!!!
27 October 2009
பாத்திர பிச்சை
முதுகில் குழந்தை சுமந்தபடி
பிச்சை எடுக்கும் ஆப்பிரிக்க பெண்மணியிடம்,
அந்நாட்டு தாள் நாணயம் கைவசம் இல்லை
என்பதை ஆங்கிலம் தெரியாத அவளிடம்
எப்படி சொல்லுவேன்
நினைத்திருப்பாள் இவன் ................. என்று.
12 October 2009
நிகழ்காலம்
உன்னை முதல் முதலாய் பார்த்த போது
நீ சிந்திய வெட்கத்தின் ஓசை
இன்னும் என் காதுகளில்...
உன்னிடம் முதல் முதலாய்
பேசிய என் வார்த்தைகளின் வாசம்
இன்னும் என் நாசியில்...
மேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)