என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

20 January 2009

அம்மா--மழை!




ஒரு மழை தினத்தன்று
என்னை நீ!
பெற்ற போது;
தொட்ட போது;
தொட்டிலில் இட்டபோது;
ஆரம்பித்த கதகதப்பு
ஆண்டுகளுக்குப் பின் - உன்னை
இடுகாட்டில்
இட்டதோடு மறைகிறது
மீண்டும் ஒரு மழை தினத்தன்று!
------------------------------------------

அன்று ஒரு மழை இரவில்
நிலா இல்லாமலே ஊட்டி விட்ட
நிலாச்சோறு நினைவிருக்கிறது
இன்று
நீ நிலவிடம்
நான் சோற்றிடம்
இது முரண்பாடா?
இடைவெளியா?
-------------------------------

14 January 2009

பொங்கலோ பொங்கல்

காலையில் கண்விழித்தவுடன்
கருங்காப்பி குடித்து
வேப்பங்குச்சியில் பல்தேய்த்து - கசந்த வாயுடன்
வேகமாய் குளித்து
ஈரத்தலையுடன் புத்தாடை புனைந்து
ஈ மொய்க்கும் கரும்பை நுனிகலைந்து வைத்துவிட்டு
தொழுவத்தில் பசுவிற்கு வைக்கோல் இட்டு
தொழுவதற்கு வாசலுக்கு அழைத்துவந்து
கல்லால் செய்த அடுப்பை
கரிவிறகால் நிரப்பிவிட்டு
மஞ்சள் பூசிய
மற்பானை வைத்து
பச்சரிசி இட்டு
பாசமலர்கள் புடைசூழ
பொங்கிவரும் சமயம்
பொங்கலோ பொங்கல்!
என்று உரக்க கத்தும்போது................

என் செல்பேசி
என்னை எழுப்பியது
ச்சே அத்தணையும் கணவா?
ஆண்டவா என்று விடியும் இந்த பொங்கல்
மீண்டும் என் சொந்த ஊரில்?