நைரோபியிலிருந்து தொடர் பயணமாய் தான்சானியாவின்
தர்-எஸ்-சலாம். நைரோபியிளிருந்து ஒன்னேகால் மணி நேர விமானப் பயணம். தர்-எஸ்-சலாம் கடலோர பகுதி என்பதால் அழகும் அதே நேரம் வெப்பம் நிறைந்த பகுதியும் கூட. சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆப்ரிக்க நா(கா)டுகளில் முக்கியமானதாக விளங்குகிறது தன்சானியா.
கலைப்பில்லாத சிறிய பயணம்.
விமான நிலையம் இறங்கியவுடன் ஐம்பது டாலர் கொடுத்து விசா வாங்கியாகிவிட்டது. என்னை அழைத்து கொண்டு போக காத்துக்கொண்டிருந்த நண்பர் மற்றும் தொழில் தோழரோடு கைக்குலுக்கி கிளம்பினேன் தன்சனியாவின் காற்றை சுவாசிக்க. நான் தர்-எஸ்-சலாமை அடைந்த நேரம் கதிரவன் கரை இறங்கிவிட்டதால் நாங்கள் செல்லும் சாலை தவிர வேறொன்றும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பயண புராணத்தை தொழில் தோழரோடு பகிர்ந்து கொண்டே செல்ல, தங்குமிடம் வந்து சேர்ந்தது.