என்னை பற்றி

My photo
தோழர்களே! என் தோளில் தடம் பதித்தமைக்கு நன்றி. உங்கள் விமர்சனங்களையும் விட்டு செல்லுங்கள்.

16 May 2010

தாவணிக் கணைகள்


அடிக்கடி கவிதை கிறுக்கும்
எனக்கு - உன் பெயரையும்
என் தொகுப்பில்
சேர்க்க தோன்றுவது ஏன்?

அடிக்கடி கடந்து போகிற
சராசரி பார்வை
உன் விழியிலிருந்து மட்டும்
விலக மறுப்பது ஏன்?

அடிக்கடி கேட்கிற
மெல்லிசை கூட
உன் குரலிசை கேட்டதும்
அடக்கி வாசிப்பதேன்?

அடிக்கடி அம்மா கட்டுகிற
பூக்கள் கூட
உன் நலம் விசாரிக்கும்போது
முகம் வாடி போவதேன்?

அடிக்கடி கரைக்கு வரும்
மீன்கள் கூட
உன் வருகை கண்டு நீருக்குள்
திரும்ப மறுப்பதேன்?

அடிக்கடி வெளியூர் செல்லும்
நீ - திரும்பும்போது மட்டும்
வண்ணத்துபூச்சிகள் நிறங்கள்
கூட்டுவது ஏன்?

அடிக்கடி சண்டையிடும்
உயர்திணைகள் கூட
உன்னை பார்த்த மாத்திரத்தில்
நாகரிகமாகிப் போவதேன்?

அடிக்கடி தொடர்பற்று போகும்
மின்சாரம் கூட  ஏற்படுத்தாத பாதிப்பு
நீ தொடர்பற்று போகும் போது
ஏற்படுவது ஏன்?

அடிக்கடி வானம் பார்க்கும்
எனக்கு
உன் முகம் மட்டும்
முழு நிலவாய் தெரிவது ஏன்?

விடை அறிந்தாலும் விளக்கம் அளிப்பாயா?